Group I, II, IIA – MAINS – Science And Technology (Prof. ILAYARAJA KANNAN) – (Tamil Medium & English Medium)

669.00

Category:

Description

Group I, II, IIA – Prelims – Science And Technology (Prof. ILAYARAJA KANNAN) – (Tamil Medium & English Medium)
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அண்மையில் வெளியிட்ட குரூப் 2/2A முதன்மைத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் “அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்” என்ற பாடப்பகுதி இடம் பெற்றுள்ளது. அப்புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்நூலை வடிவமைத்து எழுதியுள்ளார் பேராசிரியர் இளையராஜா கண்ணன்.

போட்டித்தேர்வர்களுக்கு அவசியம் தேவைப்படுகின்ற இந்நூலில், “அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்” சார்ந்த தலைப்புகள் எல்லாவற்றையும், எளிதில் புரியும்படி படங்கள் மற்றும் முக்கியக் குறிப்புகளுடன் நூலாசிரியர் விளக்கியுள்ளது இந்நூலின் பல்வேறு சிறப்புகளில் முதலிடம் வகிப்பதாகும். இதற்கு சிகரம் வைத்தாற் போன்று அத்தகு தலைப்புகள் ஒவ்வொன்றின் முடிவிலும் “நடப்பு நிகழ்வுககளை” தொகுத்தளித்துள்ளார் பேராசிரியர். மேலும் நூலில் கையாளப்பட்டுள்ள அனைத்து தொழில்நுட்ப வார்த்தைகளுக்கும் பொருத்தமான ஆங்கில விளக்கமும் தரப்பட்டுள்ளன.

அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் பாடத்துறை என்பது தினம்தினம் வளர்ந்து வரும் ஒன்று; சற்றே கடினமானதும் கூட. ஆனால் ஒரு முறை வாசித்தாலே வசப்படும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளதால் போட்டித் தேர்வர்கள் இனி அச்சப்பட வேண்டியதில்லை. அந்த வகையில் ஏற்கனவே பலரும் இந்நூலை வாங்கிப் படித்து பயனடைந்துள்ளதற்கு இந்நூலின் இந்த இரண்டாம் பாதிப்பே சாட்சியாகும்.

தரமான தாள், இரு வண்ணத்தில் அச்சடிப்பு, காலத்திற்கும் தாங்கி நிற்கும் ஏட்டுக் கட்டுமானம் என ஒவ்வொரு அங்குலத்திலும் ஜொலிக்கும் இந்நூல் கிரவுன் அளவில் 546 பக்கங்களில் வெளியாகியுள்ளது. இத்தனை சிறப்புக்கும் நீங்கள் கொடுக்கும் விலை ரூ.669/- மட்டுமே.

எனவே போட்டித்தேர்வர்கள் இந்நூலை நழுவவிட வேண்டாம்.

தேர்விலும் வாழ்விலும் வெற்றி பெற எங்கள் வாழ்த்துகள் ….
வாழ்க வல்லமையுடன்

பொருளடக்கம்

UNIT-1
அணு, அணுக்கரு இயற்பியல் மற்றும் அணு ஆற்றன் பயன்பாடுகள்
– 1. அணுக்கரு இயற்பியல்
– 2. அடிப்படை துகள்கள்
– 3. அணுக்கருக்கள்
– 4. அணுவின் நிலைப்பு தன்மை
– 5. அணு மாதிரிகள்
– 6. கதிரியக்கம்
– 7. அணு ஆற்றன் பயன்கள்
– 8. அணுசக்தி தொடர்பான அமைப்புகள், திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள்

UNIT-II
மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்
– 1. திண்மங்களின் ஆற்றல்
– 2. குறைகடத்தியின் வகைகள்
– 3. டையோடுகள்
– 4. ஒளி எலக்ட்ரானியல் கருவிகள்
– 5. டிரான்சிஸ்டர்
– 6. இலக்கமுறை எலக்ட்ரானியல்
– 7. தகவல் தொடர்பு அமைப்புகள்
– 8. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் அரசின் முன்முயற்சிகள், திட்டங்கள், கொள்கைகள்

UNIT-III
ரோபோடிக்ஸ் மற்றும் அதன் பயன்பாடுகள்
– 1. எந்திரனியல்
– 2. ரோபோ தொழில்நுட்பத்தில் அரசின் முன்முயற்சிகள், திட்டங்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகள்

UNIT-IV
நானோ தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள்
– 1. நானோ தொழில்நுட்பத்தின் அடிப்படைகள்
– 2. நானோ விவசாயம்
– 3. பசுமை மீநுண் (நானோ) தொழில்நுட்பம்
– 4. நானோ தொழில்நுட்பத்தில் அரசின் முன்முயற்சிகள், திட்டங்கள் மற்றும் கொள்கைகள்

UNIT-V
வேதி மின்கலம் மற்றும் உயிர் வேதியியல்
– 1. மின்வேதியியல் – மின்கலன்கள்
– 2. வாயுநிலை எரிபொருள்
– 3. பலபடியாக்கல்
– 4. கார்போஹைட்ரேட்டுகள்
– 5. ஆன்டிபயாடிக்ஸ்
– 6. வைட்டமின்கள்
– 7. மின்கலம், பாமலிர், கார்போஹைட்ரேட், விட்டமின்கள் எதிர் உயிரிகள் தொடர்பான அண்மைகால நிகழ்வுகள்

UNIT-VI
புவி தகவல் தொகுப்பின் GIS பயன்பாடுகள்
– 1. தொலை நுண்ணுணர்வு
– 2. உலகளாவிய ஊடுருவல் (வழிகாட்டும்) செயற்கை கோள் அமைப்பு
– 3. புவியியல் தகவல் அமைப்பு
– 4. புவிதகவல் தொகுப்பின் பயன்கள்
– 5. GIS தொடர்பான அரசின் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள்

UNIT-VII
உயிரி தொழில்நுட்பவியல் மற்றும் அதன் பயன்பாடுகள்
– 1. கோட்பாடுகள், உயிரி தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நவீன முன்னேற்றங்கள்
– 2. மரபணு பொறியியலுக்கான கருவிகள்
– 3. தாவர மரபணு பொறியியல்
– 4. மரபணு மாற்றபட்ட தாவரங்கள் மற்றும் அவற்றினால் ஏற்படும் சமூக, சுற்றுச்சூழல் தாக்கங்கள்
– 5. பயிரி மேம்பாட்டிற்கான உயிரி தொழில்நுட்ப முறைகள் மற்றும் வனவியல் தோட்டக்கலையில் தாவர திசு வளர்ப்பின் பயன்கள்
– 6. உயிரி தொழில்நுட்ப பயன்பாடுகள்
– 7. உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசின் திட்டங்கள், மற்றும் அண்மைகால நிகழ்வுகள்

UNIT-VIII
இனப்பெருக்க நவீன தொழில்நுட்பங்கள்
– 1. கருப்பையினுள் விந்தணுக்களை செலுத்துதல் (IUI)
– 2. உடல் வெளிக் கருவுறுதல் (IVF/Test Tube Baby)
– 3. அண்ட சைட்டோ பிளாசத்தினுள் விந்து செல்லை செலுத்துதல் (ICSI)
– 4. அண்ட நாளத்தினுள் இனச்செல் இடமாற்றம் (GIFT)
– 5. விந்தணுக்கள் உறைநிலை குளிரூட்டும் முறை
– 6. முக்கிய திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள்

UNIT-IX
தடுப்பு மருத்துவம்
– 1. தடுப்பு மருந்துகள்
– 2. தடுப்பு மருந்து தொடர்பான, ஆராய்ச்சிகள், முன்முயற்சிகள்

UNIT-X
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாட்டு அறிவியலாளர்களின் பங்களிப்பு

UNIT-XI
எண்ம கணினியும் அவற்றின் பயன்பாடுகளும்
– 1. எண்ம கணினி மற்றும் வன்பொருட்கள்
– 2. அமைப்பு மென்பொருள்
– 3. பயன்பாட்டு மென்பொருள்
– 4. தகவல் தொடர்பு மென்பொருள்
– 5. கணிப்பொறி வலையமைப்பு
– 6. பல்லூடகம்
– 7. வலையமைப்பு பாதுகாப்பு
– 8. கணினி சார்ந்த திட்டங்கள், முன்முயற்சிகள்

UNIT-XII
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த முக்கிய தலைப்புகள்
– 1. செயற்கை நுண்ணறிவு [Artificial Intelligence (AI)]
– 2. இயந்திரக் கற்றல் [Machine Learning (ML)]
– 3. மேகக் கணிமை (Cloud Computing)
– 4. நம்பிக்கை இணையம் (Blockchain)
– 5. இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT)
– 6. குவாண்டம் கணினி (Quantum Computer)

Reviews

There are no reviews yet.

Be the first to review “Group I, II, IIA – MAINS – Science And Technology (Prof. ILAYARAJA KANNAN) – (Tamil Medium & English Medium)”