Description
தற்கால தமிழ்நாட்டின் ஆட்சி, நிர்வாகம், இலக்கியம், பண்பாட்டிற்கு வித்திட்ட முற்கால தமிழ்நாட்டின் ஆட்சி, ஆட்சிகளின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி, சங்ககால இலக்கியம், பண்பாடு ஆகியவற்றையும் அரசுப்பணிகளுக்கான தேர்வுகளை எழுதும் ஒரு போட்டித்தேர்வர் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாதது ஆகும். இதற்கு உதவிடும் முகமாக டாக்டர் க.வெங்கடேசன் அவர்கள் தமிழ்நாட்டின் முற்கால வரலாற்றை தமிழ்நாடு வரலாறும் பண்பாடும் என்ற பெருந்தலைப்பில் “பண்டையகாலம்” (சங்ககாலம் முழுவதும்) என்றும், “இடைக்காலம்” (களப்பிரர் காலம் முதல் நாயக்கர் ஆட்சிக்காலம் வரை) என்றும் இரண்டு தொகுதிகளில் எழுதியுள்ளார். முதல் தொகுதி பண்டைக்கால தமிழ்நாடு பற்றியது. மேற்சொன்னது போல் இது சங்ககாலம் முழுவதையும் விளக்குகின்றது. இத்தொகுதியில் மூன்று பகுதிகள் உள்ளன. அவை (1) சங்ககாலத் தமிழ்நாட்டு வரலாறு, (2) வரலாற்றுக்கு முற்பட்ட தமிழ்நாடு, (3) சங்க கால இலக்கியம். இவற்றில், பழைய கற்கால, சங்ககால தமிழ்நாடு, கீழடி அகழாய்வு, சோழர், பாண்டியர், மதுரை சுல்தான்கள், விஜயநகரம் ஆகிய பேரரசுகளின் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றினையும், பண்பாட்டின் பல பரிமாணங்களையும் விரிவாக எழுதியுள்ள ஆசிரியர் வெங்கடேசன், இவர்களது ஆட்சி, எழுச்சி, வீழ்ச்சி பற்றியும் திறனாய்வுக் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து எழுதியுள்ளார். இரண்டாம் தொகுதியான இடைக்கால தமிழ்நாடு (களப்பிரர் காலம் முதல் நாயக்கர் ஆட்சிக்காலம் வரை) என்ற நூல் மொத்தம் எட்டு பகுதிகளைக் கொண்டது. அவை, (1) களப்பிரர்கள் தமிழ்நாடு, (2) பல்லவர் காலத் தமிழ்நாடு, (3) பாண்டியர் காலத் தமிழ்நாடு – I, (4) சோழர்காலத் தமிழ்நாடு, (5) பாண்டியர்காலத் தமிழ்நாடு II (6) மதுரை சுல்தான்கள் காலத் தமிழ்நாடு, (7) விஜயநகர ஆட்சிகாலத் தமிழ்நாடு மற்றும் (8) நாயக்கர் ஆட்சிக்காலத் தமிழ்நாடு. இந்த எட்டுப்பகுதிகளிலும் பண்பாடு, இலக்கியம், பொருளாதார நிலை, சமுதாய நிலை, சமய நிலை, கல்வி நிலை, கவின் கலைகள், வாழ்வியல் முறை, மன்னர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் என நூலாசிரியர் விளக்கியுள்ளார். அத்துடன் இப்பகுதிகளை திறனாய்வு செய்தும் எழுதியுள்ளார். மைய ஆட்சிப்பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் இந்த இரண்டு நூல்களும் ஓர் வரப்பிரசாதம் என்றால் அது மிகையன்று.
Reviews
There are no reviews yet.