Description
Group I, II, IIA – MAINS – GEOGRAPHY OF TAMILNADU (Prof. ILAYARAJA KANNAN) – (Tamil Medium)
TNPSC, UPSC உள்ளிட்ட பல்வேறு அரசுப்பணி போட்டித் தேர்வர்களுக்கு பயன் தரும் வகையிலும், அதே நேரம் பாடத்திட்டம் மற்றும் முந்தைய தேர்வு வினாத்தாள்களை மையமாகக் கொண்டும் பல்வேறு நூல்களை திறம்பட எழுதி வருபவர் பேராசிரியர் இளையராஜா கண்ணன். அந்த வகையில் அவர் எழுதியுள்ள “தமிழ்நாட்டின் புவியியல்” என்ற இந்த நூல் ஓர் மைல் கல் என்றே கூற வேண்டும்.
இது போட்டித் தேர்வர்கள் மட்டுமல்லாது, புவியியலை பாடமாகத் தெரிவு செய்துள்ள பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்நாட்டின் புவியியலை அதன் சுற்றுச் சூழல், பேரிடர் மேலாண்மை தொட்டு அறிந்து கொள்ள விளையும் பொதுமக்கள், இத்துறைசார் அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் என எல்லோருக்கும் பயன்தருவதாகும்.
தமிழ்நாட்டின் புவியியல் என்ற பாடப்பிரிவில் விளக்கமான மற்றும் அண்மைக்கால சூழலை ஒட்டிய நூல்கள் ஏதும் இல்லாத குறையை இந்நூல் நிறைவு செய்கின்றது என்று சொன்னால் அது மிகையன்று. வாசிப்பவர்கள் யாவரும் தமிழில் இப்படி ஒரு நூலை இதுகாறும் பார்த்தது இல்லை என்று சொல்லக்கூடிய அளவில் பக்கத்திற்கு பக்கம் புள்ளி விவரங்கள், அட்டவணை விளக்கங்கள், வரைபட வடிவிலான தரவுகள், தமிழ்நாட்டின் நிலவியல் இயற்கூறுகளை காட்டும் நாட்டுப்படங்கள் (Maps), கலைச்சொற்களுக்கான பொருள்கள் என இதன் சிறப்பம்சங்கள் பெரும் பட்டியலாக நீளுகின்றது. குறிப்பாக முக்கிய விடயங்கள் யாவற்றையும் ஊதா நிற பின்னணிக்குள் தந்திருப்பது வெகு சிறப்பு.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட இந்நூலின் உள்ளடக்கம்தான் என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வம் மேலிடுகின்றது அல்லவா? வாருங்கள் இந்த நூலுக்குள் செல்வோம்.
இந்நூலை மொத்தம் 10 அலகுகளாக பிரித்துள்ள இதன் ஆசிரியர், அத்தகு அலகு ஒவ்வொன்றின் கீழும் பல அத்தியாயங்களின் வாயிலாக தமிழ்நாட்டின் புவியியலை எளிய தமிழில் தெளிவுற படம் பிடித்துக் காட்டுகின்றார். வெகு நேர்த்தியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ள அந்த 10 அலகுகளும் அத்தியாயங்களும் பின்வருமாறு:-
அலகு I
தமிழ்நாட்டின் புவியியல் மற்றும் இயற்கை அமைப்பு
– 1. தமிழ்நாட்டின் புவியியல்
– 2. தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு
– 3. தமிழ்நாட்டின் அமைவிடம் மற்றும் அரசியல் பிரிவுகள்
அலகு II
தமிழ்நாட்டின் காலநிலை மற்றும் மண்வளம்
– 1. தமிழ்நாட்டின் காலநிலை
– 2. தமிழ்நாட்டின் பருவகாலம்
– 3. தமிழ்நாட்டின் மண்வளம்
அலகு III
தமிழ்நாட்டின் வன வளங்கள்
– 1. தமிழ்நாட்டின் காடுகள்
– 2. தமிழ்நாட்டின் வன உயிரின வளம்
அலகு IV
தமிழ்நாட்டின் விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் நீர்வள மேலாண்மை
– 1. தமிழ்நாட்டின் வேளாண்மை
– 2. தமிழ்நாட்டின் நீர்வளம்
– 3. தமிழ்நாட்டின் கால்நடை வளங்கள்
– 4. தமிழ்நாட்டின் பால்வளம்
– 5. தமிழ்நாட்டின் மீன்வளம்
அலகு V
தமிழ்நாட்டின் கனிம வளங்கள், ஆற்றல் வளங்கள் மற்றும் தொழிற்சாலைகள்
– 1. தமிழ்நாட்டின் கனிம வளம் மற்றும் ஆற்றல் வளம்
– 2. தமிழ்நாட்டின் தொழிற்துறை
அலகு VI
தமிழ்நாட்டின் போக்குவரத்து
– 1. சாலைப்போக்குவரத்து
– 2. இரயில் போக்குவரத்து
– 3. நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து
அலகு VII
தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் தமிழ்நாடு எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள்
– 1. சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு
– 2. காற்று மாசுபாடு
– 3. நீர் மாசுபாடு
– 4. ஒலி மாசுபாடு
– 5. மண் மாசுபாடு
– 6. இதர மாசுபாடுகள் (வெப்ப மாசுபாடு, கதிரியக்க மாசுபாடு, மின்னணு மாசுபாடு)
– 7. திடக்கழிவு மேலாண்மை
– 8. இயற்கை வளங்கள்
அலகு VIII
உயிரினப் பன்மை
– 1. உயிரின பன்மை மற்றும் வகைப்பாடு
– 2. பல்லுயிர்த் தன்மைக்கான அச்சுறுத்தல் / இனங்கள் அழிவதற்கான காரணங்கள்
– 3. உயிரினப் பன்மை பாதுகாப்பு
– 4. தமிழக அரசின் உயிரினப் பன்மை பாதுகாப்பு நடவடிக்கைகள்
– 5. தமிழ்நாட்டின் பல்லுயிர்ப் பெருக்கம்
அலகு IX
காலநிலை மாற்றம்
– 1. புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றச் செயல்பாடுகள்
– 2. தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் நிர்வாகம்
– 3. காலநிலை மாற்றத்திற்கான தமிழக அரசின் செயல்திட்டங்கள்
– 4. தூய்மையான ஆற்றல் மற்றும் பசுமை ஆற்றல்
– 5. காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடுகள் மற்றும் நடவடிக்கைள்
– 6. நிலையான நீடித்த வளர்ச்சி
அலகு X
பேரிடர் மேலாண்மை
– 1. பேரிடர்
– 2. இயற்கை பேரிடர்
– 3. மானுடவியல் (மனிதனால் ஏற்படுத்தப்பட்ட) பேரிடர்கள்
– 4. தமிழ்நாட்டில் பேரிடர் மேலாண்மை நிலைகள், நிதிப்பகிர்வு மற்றும் கொள்கைகள்
– 5. பேரிடர் அபாய நிர்வாகம், ஆணையங்கள் / குழுக்கள்
– 6. பேரிடர் மீட்பு நடைமுறைகள்
– 7. தமிழ்நாட்டில் பேரிடர் மேலாண்மையில் அரசு சாரா மற்றும் குடிமை சமூகத்தின் பங்கு
–
இவ்வாறு விரிவான உள்ளடக்கத்தைக் கொண்ட இந்த நூல் தமிழ்நாட்டின் புவியியலை முதற்கண் படிப்படியாக விளக்கி, பின் சுற்றுச்சூழலை பல்லுயிரியம் மற்றும் காலநிலை மாற்றத்துடன் சொல்லி, நிறைவாக பேரிடர் மேலாண்மை எனும் பெரும் இயலுடன் நமக்கு விடை தருகின்றது.
தமிழ்நாட்டின் புவியியல் விவரங்கள் தாங்கிய ஓர் பெட்டகமாக கிரவுன் அளவிலான தாளில் 462 பக்கங்களில் வண்ண அச்சுடன் வெளிவந்திருக்கும் இந்த நூலின் விலை ரூ.650/- மட்டுமே. எனவே அரிய இந்த நூலை நழுவிட வேண்டாம்.


















Reviews
There are no reviews yet.