தமிழ்நாட்டில் நடந்த முக்கிய போராட்டங்கள்

முன்னுரை

சுதந்திர போராட்டத்தில் தமிழ் நாட்டு தலைவர்களின் முக்கிய பங்கு பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம்

தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது வங்கபிரிவினை இதில் முக்கிய பங்காற்றிய தலைவர்கள் வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, சுப்பிரமணிய பாரதி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். வங்கப்பிரிவினை 1905 ஆம் ஆண்டு நடைபெற்றது. 1907 ஆம் ஆண்டு சூரத் பிளவு பிறகு வ உ சி யும் மற்ற தேசியவாதிகளும் இணைந்து சென்னை ஜன சங்கத்தை தோற்றுவித்தவர் இதில் முக்கிய பங்காற்றியவர் வ.உ.சி.

பாரதியார்

பாரதியார் புரட்சிகரமான அரசியல் சமூக சிந்தனைகளை கொண்டவராகவும் விளங்கினார். அவர் இந்தியா என்ற தமிழ் வார இதழின் ஆசிரியராகவும் இருந்தார். சுதேசி கீதங்கள் என்றழைக்கப்படும் தேசிய பாடல்களை அவர் வெளியிட்டுள்ளார். 1907 ஆம் ஆண்டு சூரத் மாநாட்டில் பாரதியார் கலந்து கொண்டார்.

வ.உ.சிதம்பரம் பிள்ளை

ஒரு வழக்குரைஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார். 1905 தேசிய இயக்கத்தில் கலந்து கொண்டார் பாலகங்காதர திலகரின் சீடராக வ.உ.சி திகழ்ந்தார். தூத்துக்குடியில் நடைபெற்ற பவள ஆலை தொழிலாளர் வேலை நிறுத்தத்தை தலைமையேற்று 1908ல் நடத்தினார். 1906இல் சுதேசி நீராவிக் கப்பல் கழகத்தை தூத்துக்குடியில் நிறுவினார். எனவே கப்பலோட்டிய தமிழன் என்று சிறப்புப் பெயரால் அவர் அழைக்கப்பட்டார். 6 ஆண்டுகாலம் கடும் சிறைவசத்தை  அனுபவித்தார் சிறையில் செக்கிழுக்கும் கொடுமைக்கு ஆளானதால் செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்பட்டார்.

அன்னிபெசன்ட் அம்மையார்

1916 ஆம் ஆண்டு சென்னையில் அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கி நடத்தினார் நியூ இந்தியா என்ற தமது இதழில் தன்னாட்சி இயக்கம் தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார்அதனால் காங்கிரஸ் கட்சியின் அனுமதியைக் கோரினார். முதல் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் தன்னாட்சி இயக்கம் மிகவும் தீவிரமாக நடைபெற்றது பால கங்காதர திலகர் இவரது முயற்சிக்கு ஆதரவு தந்தார்.

ஒத்துழையாமை இயக்கம்

1921 முதல் 1923 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கம் தீவிரமாக நடைபெற்றது ஒத்துழையாமை இயக்கத்தின் போது மது அருந்துவதற்கு எதிரான இயக்கங்கள் நடைபெற்றன குறிப்பாக மது அருந்துவதற்கு எதிரான போராட்டம் மதுரையில் மிகத் தீவிரமாக நடைபெற்றது தமிழ்நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் பரவலாக அங்கு நடைபெற்று வந்தது இதன் முக்கிய தலைவர்களாக ராஜாஜி சத்தியமூர்த்தி பெரியார் போன்றோர் செயல்பட்டனர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பெரியார் இருந்தார்.

காமராஜர்

விருதுநகரை சேர்ந்த காமராஜர் மற்றொரு முக்கிய விடுதலை வீரர் ஆவார். 1924இல் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டதன் மூலம் அவர் தேசிய இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவர்களில் மிகவும் முக்கியமானவராக காமராசர் கருதப்படுகின்றார். 1929இல் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராக மற்றும் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காமராசர் மக்கள் தலைவராக திகழ்ந்தார் எளிமையான நடையில் அவர் பேசுவார் செயல் திறன் மிக்கவராக அவர் திகழ்ந்தார். காமராசர் தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று மக்களின் பல்வேறு பிரச்சினைகளை அவர் புரிந்து கொண்டார். தமிழ்நாட்டின் கிராமங்களுக்கு காங்கிரஸ் இயக்கத்தை கொண்டு சென்றவர் காமராசர் என்று கூறலாம்.

உப்பு சத்தியாகரகம்

சட்டமறுப்பு இயக்கத்தின ஒரு பகுதியாக காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்தை தொடங்கினார். 1930இல் கண்டி என்ற இடத்தில் காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகம் யாத்திரையை மேற்கொண்டார். 1930 ஏப்ரல் மாதத்தில் சி ராஜகோபாலாச்சாரி தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகத்தை மேற்கொள்ளும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது வரலாற்று புகழ்பெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நடை பயணத்தை அவர் மேற்கொண்டார் திருச்சியிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வேதாரண்யம் கடற்கரைக்கு நடை பயணம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டு தமிழ் புத்தாண்டு அன்று ஏப்ரல் 13 பயணத்தை தொடங்கினார். 1930 ஏப்ரல் 28-ஆம் நாள் இப்பயணம் வேதாரண்யத்தில் முடிவடைந்தது இரண்டு நாட்கள் கழித்து சட்டங்களை மீறியதற்காக கைது செய்யப்பட்டார். கொடியேந்தி போராட்டம் நடத்திய திருப்பூர் குமரன் தடியடிக்கு ஆளானார் கொடியை கையில் பிடித்து போராடிய அந்த மாவீரன் கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்பட்டார் இவரது நினைவைப் போற்றி இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் எழுச்சிமிக்க பாடல்களால் தேசிய இயக்கம் மேலும் வலிமை பெற்றது விடுதலை இயக்கத்தில் காந்திய கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டிய அவசியத்தை அவரது பாடல்கள் எடுத்துக் கூறினர். கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்று அவர் பாடினார் பிரிட்டிஷாருக்கு எதிரான அகிம்சை போராட்டத்தின் கொள்கையை விளக்குவதாக இந்த வரிகள் அமைந்தன.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

1935ஆம் ஆண்டு சட்டத்தின்படி 1937-ஆம் ஆண்டு தேர்தல்கள் இந்தியாவில் நடந்தன சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராஜாஜி தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்றது அவரது அமைச்சரவையில் ஒன்பது அமைச்சர்கள் இருந்தனர். 1937 ஜூலை முதல் 1939 அக்டோபர் வரை இந்த அமைச்சரவை பதவியில் நீடித்தது இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தி அதை கண்டித்து காங்கிரஸ் அமைச்சரவையில் பதவி விலகியபோது ராஜாஜி அமைச்சரவையும் பதவி விலகியது. இரண்டாம் உலகப் போரின் போதுகிரிப்ஸ் தூதுக்குழு பரிந்துரைகள் தோல்வி அடையவே காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கினார் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் ஆலய தொழிலாளர்கள் மாணவர்கள் பொதுமக்கள் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர் இது நாடு தழுவிய போராட்டமாக அமைந்தன. 1947 ஆகஸ்ட் 15 இல் இந்தியா விடுதலை அடைந்தபோது ஓ பி ராமசாமி ரெட்டியார் தலைமையிலான சென்னை அரசாங்கம் இந்திய விடுதலை சட்டத்தை பாராட்டி தீர்மானத்தை இயற்றியது.

தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் ஆட்சி

சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியின் ஆட்சி தென் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது நீதிக்கட்சியின் நோக்கங்களும் தனி தன்மை உடையதாக இருந்தது காங்கிரஸ் கட்சி கொள்கையிலிருந்து மாறுபட்டதாகவும் காணப்பட்டது. நீதிக்கட்சி பிராமணர் அல்லாதார் இயக்கத்தின் பிரதிநிதியாக செயல்பட்டு பணித்துறை மற்றும் கல்வித் துறை போன்றவற்றில் பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து ஒரு சமூகப் புரட்சியை நீதிகட்சி உருவாக்கியது. நீதிக்கட்சியின் முன்னோடி சென்னை ஐக்கிய கழகம் ஆகும் இது 1912 நவம்பர் மாதத்தில் சென்னை திராவிட சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது இந்த அமைப்பு வளர்ப்பதற்கு நடேச முதலியார் முக்கிய பங்காற்றினார்.  அமைப்பு நீதி கட்சி என்று அழைக்கப்பட்டது. நீதிக்கட்சியை ஆதரித்த மற்றொரு தமிழ் பத்திரிகை திராவிடன் ஆகும். மேலும் ஜஸ்டிஸ் கட்சி பல பொதுக்கூட்டங்கள் மாநாடுகள் சொற்பொழிவுகள் வாயிலாக பிராமணரல்லாதோர் இயக்கத்தை மக்களிடையே பரவியது அது ஜஸ்டிஸ் கட்சி மாவட்ட அமைப்புகளை உருவாக்கியது மற்றும் பிராமணரல்லாத இளைஞரணி தோற்றுவித்தது. நீதிக்கட்சி 1920 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது சென்னையில் சட்டசபையில் 98ல் 63 இடங்களில் நீதி கட்சி வெற்றி பெற்றது. முதல் முதலமைச்சராக ஏ சுப்பராயலு ரெட்டியார் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது 1923 ஆம் ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சி சுயராஜ்ய கட்சியை எதிர்த்து போட்டியிட்டதுகாங்கிரசுக்கு பெரும்பான்மை பெற முடியவில்லை. 1926ஆம் ஆண்டு சுயராஜ்யக் கட்சியின் ஆதரவுடன் பதவிக்கு வந்தவர் சுப்பராயன் 1930ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் நீதி கட்சி பெரும்பான்மை பெற்றது முனுசாமி நாயுடு தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. 1932இல் பொப்பிலி அரசர் தலைமை அமைச்சரானார். 1934இல் இரண்டாவது முறையாக பொப்பிலி அரசர் அமைச்சர் ஐக்கிய தலைமையேற்ற 1937ஆம் ஆண்டு வரை அவரது ஆட்சி தொடர்ந்தது.

நீதிக்கட்சியின் சாதனைகள்

மொத்தம் 13 ஆண்டுகள் நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தது சமூகநீதியும் சமூக சீர்திருத்தங்களும் இந்த ஆட்சியின் சிறப்புகளாகும் அரசு பணியிடங்களில் பிராமணரல்லாத சமூகத்தினருக்கு போதிய பிரதிநிதித்துவத்தை நீதிக்கட்சி விளங்கியது கல்வி சீர்திருத்தங்கள் மூலம் தாழ்த்தப்பட்டோர் நிலை  உயர்வதற்கு நீதிகட்சி பாடுபட்டது. 1924 ஆம் ஆண்டு அமைச்சரவை ஆல் உருவாக்கப்பட்ட பணியாளர் தேர்வு கழகமே, 1929இல் பணியாளர் தேர்வு ஆணையம் ஆக மாற்றப்பட்டது. ஏன்நிகராக பெண்களும் வாக்குரிமை வழங்கப்பட்டது. பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது. 1922 ஆம் ஆண்டு சென்னை அரசாங்க தொழிற்சாலைகள் உதவி சட்டம் கொண்டு வரப்பட்டது. சிமெண்ட் தொழிற்சாலைகள் எண்ணை தொழிற்சாலைகள் உருவாகின. நீர்ப்பாசன வசதிகள் வழங்க வழிவகை செய்தது நீதி கட்சி. நீதி கட்சி கிராமப்புற வளர்ச்சிக்காகவும் வேளாண் மக்களுக்கு உதவி திட்டங்களை அறிமுகப்படுத்தியது நோய்களை தடுக்க பொது சுகாதார திட்டங்களை கொண்டு வந்தது. கிராமப்புற சாலைகளை மேம்படுத்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன சென்னையில் நகர மேம்பாட்டு குழு வாயிலாக சென்னை மாநகராட்சி குடிசைகள் மாற்றி வீடு கட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சமுதாய நல நடவடிக்கைகளாகதாழ்த்தப்பட்டவர்களுக்கு தரிசு நிலங்களை வழங்கியது. பெண்களை இழிவுபடுத்தும் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. சென்னை பல்கலை கழகத்தின் செயல்முறைகள் சீரமைக்கப்பட்டன.‌ 1926 நீதிக்கட்சி ஆட்சியின் போது ஆந்திரா பல்கலைக்கழகமும், 1929 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் நிறுவப்பட்டன.

நீதிக்கட்சி ஆட்சியின் முடிவு

1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டப்படி மாகாண சுயாட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்கும் இந்திய அமைச்சர்கள் இடமே மாகாணத்தை ஆட்சி செய்யும் பொறுப்பு என்ற நிலை தோன்றியது. இந்த தருணத்தில் நீதிக்கட்சியின் தலைவராக கே வி ரெட்டி நாயுடுவும், காங்கிரஸ் தலைவராக சி. ராஜகோபாலாச்சாரி யாரும் பொறுப்பு வகித்தனர். 1937ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சட்டசபைக்கு 215 இடங்களில் 152 காங்கிரஸ் வெற்றி பெற்றது. சட்ட மேலவையில் 46 இடங்களில் 26 காங்கிரஸ் கைப்பற்றியது. 1937 ஜூலையில் ராஜகோபாலாச்சாரி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவியேற்றது. பல்வேறு சமூக முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்களை கொண்டு வந்த நீதி கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நீதி கட்சி கட்டணமில்லாத கட்டாய கல்வி முதன் முறையாக சென்னையில் அறிமுகபடுத்தப்பட்டது. ஏறத்தாழ 3 ஆயிரம் மீனவ குடும்பங்களை சேர்ந்த சிறுவர் சிறுமியர்களுக்கு மீன்வளத் துறையின் மூலமாக இலவச மீன்பிடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி பள்ளிகளில் இலவச மதிய உணவு அளிக்கப்பட்டது. 1934ஆம் ஆண்டு சென்னை துவக்க கல்வி சட்டம் திருத்தப்பட்டு 1935இல் துவக்கக்கல்வியின் தரம் மேம்பட தப்பட்டது. பெண்கல்வி நீதிக்கட்சியின் ஆட்சியில் ஊக்குவிக்கப்பட்டது தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் கல்வி தொழிலாளர் நலத்துறை இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆயுர்வேதா சித்தா யுனானி மருத்துவக் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. மாவட்ட முன்சீப் புகளை நியமிக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திடம் இருந்து பறிக்கப்பட்டது. 1921 மற்றும் 1922-ம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு அரசாணைகள், உள்ளாட்சி அமைப்புகளிலும் கல்வி நிறுவனங்களிலும் பிராமணர் அல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீட்டுக்கு வழிவகுத்தன. நீதிக்கட்சி நிர்வாகங்களில் நிலவிய ஊழலை ஒழிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.